தனி காரில் கட்சியினர் இன்றி சென்ற முதல்வர் | CM Stalin | DMK | Alagiri | Madurai
திமுக பொதுக்குழு கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின் 20 கிலோ மீட்டர் ரோடு ஷோ சென்று மக்களை சந்தித்தார். பின் மதுரையின் முன்னாள் மேயர் முத்துவின் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து இரவில் தன் சகோதரர் அழகிரியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். அவரை அழகிரி கட்டி தழுவி வீட்டிற்குள் அழைத்து சென்றார். ஸ்டாலினுக்கு விருந்து கொடுத்து மகிழ்ந்தார். முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று அவர் மதுரை செல்லும் போதெல்லாம் அழகிரி வீட்டுக்கு செல்வாரா என்ற கேள்வி எழும். திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி அரசியலிலிருந்து ஒதுங்கி உள்ளார். சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு அழகிரி வீட்டுக்கு நேற்று ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த சந்திப்பின் போது கட்சியினர், குடும்பத்தினர் என யாரையும் ஸ்டாலின் அழைத்து செல்லவில்லை.