நேரில் வந்து விசாரித்த அமைச்சர் ராஜ்மோகன் | CM Vijay| Actor Muthukaalai | Minister Rahmohan
தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் முத்துக்காளை. இவர் தனது மனைவியின் உயிரை காப்பாற்றி தருமாறு, தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். என் மனைவி மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவால் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார். தலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கிருமி நோய் தொற்றால் 17 நாட்களாக மூச்சு விட சிரமப்பட்டு நினைவின்றி இருக்கிறார். உரிய மேல் சிகிச்சை அளிக்க முதல்வர் ஜோசப் விஜய் உதவி செய்ய வேண்டும் என கேட்டு இருந்தார். முத்துக்காளையின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை போனில் பேச வைத்தார். மருத்துவமனைக்கு அமைச்சர் ராஜ் மோகனை நேரடியாக அனுப்பி, நலம் விசாரித்து உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.