₹900 கோடி ஊழலில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! Coal Handling Scam | Chettinad Group | ED Raid | TN
சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து நிலக்கரி வாங்கப்பட்டு, தமிழக அனல் மின் நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தமிழக துறைமுகங்களுக்கு கடல்வழியாக நிலக்கரியை எடுத்து வருவதற்கான ஒப்பந்த பணியை, செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான சவுத் இந்தியா கார்ப்பரேஷன் செய்து வந்தது. சவுத் இந்தியா கார்ப்பரேஷன் அதிகாரிகள், அப்போதைய மின்வாரிய அதிகாரிகள் சிலர் உடந்தையுடன் போலி கணக்கு காட்டி, சுமார் 900 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக அறப்போர் இயக்கம் சார்பில் 2018ல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 2011 முதல் 2016ம் ஆண்டு வரை, நிலக்கரியை கையாள 234 கோடி மட்டும் செலவு செய்துவிட்டு, 1,267 கோடி ரூபாய்க்கு போலி கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.