கோவையில் 14 இடங்களில் நடந்த சம்பவம் | Coimbatore | Coimbatore Theft | CCTV
கோவை - பொள்ளாச்சி ரோட்டில் சுந்தராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட எல்ஐசி காலனியில் அடுத்தடுத்து 14 கடைகளில் திருட்டு நடந்துள்ளது. அங்குள்ள ஹோட்டல், மெடிக்கல் ஷாப், ஜெராக்ஸ் கடை, கொரியர் அலுவலகம் என 14 கடைகளின் ஷட்டர் பூட்டுகளை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த கடை வியாபாரிகள் சுந்தராபுரம் போலீசில் புகார் கொடுத்தனர். திருட்டு நடந்த கடைகளில் போலீசார் விசாரணை நடத்தினர். தடையங்களை சேகரித்தனர். சொல்லி வைத்தது போலவே எல்லா கடையிலும் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் மட்டும் காணாமல் போயிருக்கிறது.
ஜன 31, 2025