பார்த்தாலே பதற வைக்கும் காட்சிகள் | Coimbatore | Wild Elephant
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், மருதமலை, தடாகம்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வீடுகள், ரேஷன் கடைகள், உணவு குடோன்கள், விவசாய நிலங்களில் புகுந்து நாசம் செய்கின்றன. வனத்துறையினர் குழுக்கள் அமைத்து யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். சமீபத்தில் தடாகம் அருகே கெம்பனூரில் விவசாயி கதிரவன் தோட்டத்தில் 2 யானைகள் புகுந்தது. மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தவிடு மூட்டைகளை ருசி பார்த்தது.
ஜூலை 28, 2024