/ தினமலர் டிவி
/ பொது
/ மாற்று நிலம் போதாது இழப்பீடும் தர வேண்டும் | Coimbatore Farmer |Land Acquisition |Central Prison
மாற்று நிலம் போதாது இழப்பீடும் தர வேண்டும் | Coimbatore Farmer |Land Acquisition |Central Prison
கோவை, தென்னம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பிளிச்சி பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைப்பதற்காக, 2 ஆண்டுகளுக்கு முன்பு 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. சிறைச்சாலை கட்டுமானம் நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் விவசாயம் செய்து வந்தவர்களுக்கு மாற்று இடம் தருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நிலத்துடன் நஷ்டஈடு தொகையும் வழங்க வேண்டும் என்று விவசாய குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூலை 16, 2026