ஆரம்பமே சொதப்பல்: கோவை அவிநாசி ரோடு பாலத்தில் புது தலைவலி | Coimbatore flyover | Avinashi Road
ோவையில் அவிநாசி ரோடு போக்குவரத்து நெரிசல் மிகுந்தது.
பிரபல கல்லூரிகள், ஆஸ்பிடல்கள், ஆலைகள் நிறைந்த பகுதியாகும்.
நெரிசலுக்கு தீர்வாக உயர்மட்ட பாலம் கட்ட அரசு முடிவு செய்தது.
உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டு வின்ஸ் வரை 10.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 1621 கோடி ரூபாயில் பாலம் கட்டப்பட்டது.
2020 அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் தற்போது முடிந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இப்போது கோவையில் இருந்து ஈரோடு, திருப்பூர் செல்லும் வாகனங்கள் பாலம் வழியாக எளிதாக அவிநாசி ரோட்டை கடந்து செல்கின்றன.
ஏர்போர்ட், ஹோப் காலேஜ், நவ இந்தியா, அண்ணா சிலை சந்திப்பு ஆகிய நான்கு இடங்களில் இடது பக்கம் இறங்கு தளமும், வலது பக்கம் ஏறு தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இறங்கு தளமும், ஏறு தளமும் தலா அரை கிலோ மீட்டர் துாரம் நீளம் கொண்டவை.
இதனால் பாலத்தில் இருந்து இடையில் இறங்க நினைத்தாலும் எளிதாக இறங்கி வேறு பகுதிகளுக்கு செல்ல முடிகிறது.
ஆகமொத்தம் அவிநாசி ரோடு நெரிசல் பெருமளவில் குறைந்துள்ள நிலையில் உப்பிலிபாளையத்தில் மட்டும் புது சிக்கல் உருவெடுத்துள்ளது.
அவினாசி சாலை பழைய மேம்பாலம், அதன் கிழக்கு பகுதியில் உள்ள சுரங்கப் பாதை வழியாக வரும் வாகனங்கள் கலெக்டர் ஆபீஸ் மற்றும் ரேஸ் கோர்ஸ் செல்ல உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் திரும்புகின்றன.
அதே நேரத்தில் புதிதாக திறக்கப்பட்ட அவிநாசி ரோடு மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உப்பிலிபாளையத்தில் ரவுண்டானாவுக்கு வருகின்றன.
இதனால் அங்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.
இந்த சிக்கலுக்கு தற்காலிகமாக புதிய மேம்பாலத்தில் வரும் வாகனங்களில் உப்பிலிபாளையம் வரை செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அவை அனைத்தும் அண்ணா சிலை அருகே இறங்கு தளத்தில் இறங்கி செல்ல அனுமதிக்கப்பட்டது.
அத்துடன் உப்பிலிபாளையம் பகுதியில் வாகனங்கள் செல்லாமல், இருக்க மேம்பாலத்தில் தற்காலிகமாக தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.
இதையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
கோவை மாநகர போக்குவரத்து அதிகாரிகள் நெரிசல் உண்டாகும் பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
#CoimbatoreFlyover #TamilNaduInfrastructure #AvinashiRoad #TrafficRelief #MKStalin #LongestFlyover #TamilNaduNews #UrbanDevelopment #Infrastructure #GTNaiduFlyover #CoimbatoreNews #ElevatedBridge #SegmentalBoxTechnology #GermanShutterTechnology