உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜிடி நாயுடு மேம்பாலம் பெயர் மாறுமா?: அமைச்சர் விளக்கம் Coimbatore Flyover| GD Naidu| mk stalin| see

ஜிடி நாயுடு மேம்பாலம் பெயர் மாறுமா?: அமைச்சர் விளக்கம் Coimbatore Flyover| GD Naidu| mk stalin| see

கோவை அவினாசி ரோட்டில் கட்டப்பட்டு உள்ள 10 கிலோ மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழகத்தின் மிக நீளமான பாலம் இதுதான். இதற்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை முதல்வர் சூட்டினார். திறப்பு விழாவில், ஜிடிநாயுடுவின் மகன் கோபால் கலந்து கொண்டார். அவர் கையை பிடித்து ரிப்பன் வெட்ட வைத்து பாலத்தை திறந்தார் முதல்வர் அப்பா ஜிடி நாயுடு பெயரை பாலத்துக்கு சூட்டியது மிகவும் பெருமையாக இருப்பதாக அவரது மகன் கோபால் கூறினார். 10 நிமிடத்தில் ஏர்போர்ட் சென்றுவிடலாம். இது போன்ற வசதி இந்தியாவிலேயே இல்லை என்றார். கோவை பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர் வைத்ததற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தெரு பெயர்களில் சாதியை நீக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு விட்டு பாலத்துக்கு சாதி பெயர் வைப்பதுதான் திராவிட மாடாலா? என அவர் கேட்டுள்ளார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கியவர்கள், G.D என்ற ஆங்கில எழுத்தில் பெயர் சூட்டுவது ஏன்? இதுதான் தமிழ் வளர்க்கும் முறையா? எனவே, தீரன் சின்னமலை, கொடி காத்த குமரன், வ.உசிதம்பரனார், பொன்னுசாமி, காலிங்கராயன், பொன்னர்-சங்கர் ஆகியோரின் பெயர்களில் ஒன்றை சூட்ட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார். பாலத்துக்கு சாதி அடிப்படையில் பெயர் சூட்டியது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஏ.வ வேலு பதில் அளித்தார். #GdNaiduFlyover #KovaiBridge #Mk stalin #CoimbatoreBridgeOpen #SeemanNTK #GdNaidu

அக் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை