கோவையில் மாற்று மத பெண்களிடம் அத்துமீறல் | Coimbatore | Hijab | burka | Hijab Challenge
ஓவரா போன யூடியூபர்.. நில்லுங்க! பர்தா போட்டு பாருங்க! பப்ளிக்கா பெண்களுக்கு அதிர்ச்சி டிஸ்க்: நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் அனஸ் அகமது, வயது 21. இவர் பொதுவெளியில் வித்தியாசமாக வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் இவரது குழுவினர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வீடியோ எடுக்க சென்றார். ஹிஜாப் சவால் என்கிற பெயரில் அந்த வழியாக வந்த கல்லூரி மாணவிகள், பெண்களிடம் சில கேள்விகள் கேட்டனர். பார்தா அணிந்து பார்க்க விருப்பமா? என கேட்டு சில பெண்களை பார்தா அணிய வைத்தும் வீடியோ எடுத்துள்ளனர். பார்தா அணிவதுக்கு முன்னரும், அணிந்த பின்னரும் எப்படி இருக்கு பெண்களிடம் கருத்து கேட்டுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அனஸ் அகமது யூடியூப் சேனலில் வெளியானது. இது மாற்று மதத்தினர் மத்தியில் சர்ச்சையை உண்டாக்கியது. பொதுவெளியில் குறிப்பிட்ட மத நம்பிக்கையை திணிக்க கூடாது என விமர்சனங்கள் எழுந்தது. இது குறித்து கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த பாரத் சேனா அமைப்பை சேர்ந்த குமரேசன் போலீசில் புகார் கொடுத்தார்.