கோவையை சுழற்றி அடிக்கும் கனமழை: திகைக்க வைக்கும் காட்சிகள் | Coimbatore Rain | Coimbatore Red Alert
கோவையில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் கனமழை கொட்டுகிறது. பொள்ளாச்சி அருகே பாயும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் மையப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மூழ்கியது. கோயில் வாட்ச்மேன்கள் மகாலிங்கம், ஜெயக்குமார் உள்ளே சிக்கி கொண்டனர். அப்போது ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்து கொண்டே சென்றது. பொள்ளாச்சி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி அவர்களை மீட்டனர். கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டூரிஸ்ட்கள் அருவியில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சிறுவாணி அணை நீர்மட்டமும் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. 50 அடி நீர் தேக்கம் கொண்ட அணை 37 அடியை எட்டி உள்ளது. #CoimbatoreRain #CoimbatoreRains #Coimbatore #HeavyRainCoimbatore #TamilNaduRain #MonsoonCoimbatore #CoimbatoreFloods #KovaiRain #PollachiRain #RainyCoimbatore #WeatherCoimbatore #OrangeAlertCoimbatore #DiwaliRainCoimbatore #ThunderstormCoimbatore