மாணவிகளை தவறாக தொட்ட ஆசிரியர்: கோவையில் பரபரப்பு coimbatore School central government yoga Teacher a
கோவையைச் சேர்ந்த 17 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பழகிய கல்லூரி மாணவர்கள் அவரை குனியமுத்தூருக்கு அழைத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தசம்பவம் தொடர்பாக, கல்லூரி மாணவர்கள் ரக் ஷித் 19, அபினேஸ்வரன் 19, தீபக் 20 யாதவ் ராஜ் 20 முத்து நாகராஜ் 20 நிதிஷ் 19 ஜெபின் 20 ஆகிய 7 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்த சம்பவத்தால் உண்டான பரபரப்பு அடங்குவதற்குள், மறுநாளே இன்னொரு சம்பவம் நடந்திருப்பது கோவையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவையில் மத்திய அரசு நடத்தும் ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜன் 56. இவரே யோகா ஆசிரியராகவும் உள்ளார். 7 ம் வகுப்பு மாணவிகளுக்கு ராஜன் யோகா சொல்லி தந்தர். அப்போது தன்னை தவறான முறையில் தொட்டதாக, பெற்றோரிடம் ஒரு மாணவி சொன்னார். இது பற்றி பள்ளி முதல்வர் கவனத்துக்கு வந்ததும் அவர் மற்ற மாணவிகளிடமும் விசாரித்தார். அப்போது, தங்களையும் ஆசிரியர் ராஜன் தவறான முறையில் தொட்டதாக, மேலும் சில மாணவிகள் முதல்வரிடம் புகார் கூறினர். 10க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் அவர் இப்படி நடந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் போலீசில் புகார் அளித்தார். காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் ராஜனை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் ராஜன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.