பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய கோவை பிஎம்ஸ்ரீ கே.வி.பள்ளி மாணவ - மாணவியர் | Coimbatore
பரீக்ஷா பே சர்சா என்ற (Pariksha Pe Charcha) பெயரில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ - மாணவியர்களை சந்திக்கும் பிரதமர் மோடி, அவர்களுக்கு பொதுத் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது குறித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேலும், மாணவர்களின் எதிர்கால லட்சியம் பற்றி கேட்டறியும் மோடி, அவர்களின் லட்சியம் நிறைவேறுவதற்காக கடைபிடிக்க வேண்டியவை குறித்தும் ஆலோசனை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, டில்லிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இப்படி பல மாணவர்கள் டில்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்திக்கும் நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில் கோவையில் நடந்த தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்ற மோடியை, இங்குள்ள பள்ளி மாணவ - மாணவியர் நேரடியாக சந்தித்து, அவருடன் கலந்துரையாடினர்.