உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் பெண்ணை ஏமாற்றியவர் கைது Coimbatore | one arrested | sulurCase

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் பெண்ணை ஏமாற்றியவர் கைது Coimbatore | one arrested | sulurCase

கோவை சூலூரை சேர்ந்த 33 வயது பெண் வீடியோ எடிட்டிங் வேலை செய்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை பிரிந்து வாழ்கிறார். இவரது ஆபீஸ் அருகே திண்டுக்கல்லை சேர்ந்த அந்தோணி மரிய ராபின் என்பவர் அறை எடுத்து தங்கியுள்ளார். இளம்பெண்ணுடன் பழகி வந்த அந்தோணி, அவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண்ணும், அந்தோணியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்தோணிக்கு வேறொரு பெண்ணுடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

ஜூலை 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி