இலவச சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்க கோரிக்கை | Coimbatore | National Commission for Women | NCW
கோவையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சமூக வலைதளம் மூலம் இரண்டு கல்லுாரி மாணவர்கள் பழக்கமாகினர். சில தினங்களுக்கு முன் கோவைப்புதுாரில் உள்ள தங்கள் அறைக்கு அழைத்து சென்று அங்கு தங்கியிருந்த மேலும் ஐந்து மாணவர்கள் என ஏழு பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர். மறுநாள் வீடு திரும்பிய சிறுமியிடம் நடத்திய விசாரணையில் இந்த உண்மை தெரிய வந்தது. ஏழு மாணவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை இன்று தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த கொடூரமான குற்றத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த சம்பவம் குறித்து 3 நாட்களுக்கு தேசிய மகளிர் ஆணையத்திடம் தமிழக டிஜிபி அறிக்கை சமர்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.