உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏரி ஆக்கிரமிப்பால் கலெக்டர் பங்களாவில் வெள்ளம் collector bungalow Tiruvannamalai District heavy rain

ஏரி ஆக்கிரமிப்பால் கலெக்டர் பங்களாவில் வெள்ளம் collector bungalow Tiruvannamalai District heavy rain

200 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேங்கிக்கால் ஏரி நீர் நிரம்பும் சமயங்களில் உபரிநீர் வெளியேற முறையான வழி இருந்தது. வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் வழியை ஆக்கிரமித்து, 2019ம் ஆண்டில் அறிவியல் பூங்காவை ஒரு ஏக்கர் பரப்பில் அரசு கட்டியது. அதன்பிறகு, ஏரி நிரம்பினால் உபரிநீர் வெளியேற வழியில்லாமல் 100 அடி சாலையில் வெள்ளம் புகுவது வாடிக்கையாகிவிட்டது. பெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்ததால், ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறியது. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் கலெக்டர் பங்களா சுற்றுச்சுவர் இடிந்தது. முன்புறம்,பக்கவாட்டில் இருந்த சுற்றுச்சுவர்கள் இடிந்த நிலையில், கலெக்டர் பங்களாவுக்குள்ளேயே வெள்ளம் புகுந்தது. இதனால், கலெக்டர் பங்களா தீவு போல் தத்தளிக்கிறது.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ