உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண் கவுரவ விரிவுரையாளரிடம் கல்லூரி முதல்வர் லீலை | Woman Honorary Lecturer | College Principal

பெண் கவுரவ விரிவுரையாளரிடம் கல்லூரி முதல்வர் லீலை | Woman Honorary Lecturer | College Principal

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு இயற்பியல் துறையில் பெண் ஒருவர் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கல்லூரி முதல்வர் ராமசுப்பிரமணியம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அந்த கவுரவ விரிவுரையாளரை அடிக்கடி தனியாக வந்து தன்னை பார்க்கும் படியும், ஆசையாக பேசுமாறும் வற்புறுத்தி உள்ளார். அப்படி நேரில் பேசும்போது தோளில் கை வைப்பது, உரசுவது என தவறான முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுபோதாதென்று செல்போனில் மெசேஜ் செய்தும் தொந்தரவு செய்தவர், தன்னை அட்ஜஸ் செய்து போகவில்லை என்றால் கல்லூரியில் வேலை பார்க்க முடியாது என மிரட்டி மன உளைச்சல் கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெண் கவுரவ விரிவுரையாளர் நன்னிலம் மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஜூன் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை