உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கல்லூரி மாணவி மரணத்தில் குடும்பமே நடத்திய நாடகம்

கல்லூரி மாணவி மரணத்தில் குடும்பமே நடத்திய நாடகம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் வித்யா, கோவை அரசு கல்லூரியில் முதுகலை பட்டம் படித்து வந்தார். வித்யாவும், அவருடன் படித்து வந்த திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணியும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். சமீபத்தில் வித்யாவை பெண் கேட்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார் வெண்மணி. ஆனால், வித்யாவின் பெற்றோர் தண்டபாணி-தங்கமணி திருமணம் செய்து தர மறுத்துவிட்டனர். இந்நிலையில், மர்மமான முறையில் வித்யா இறந்தார். வீட்டில் தனியாக இருந்தபோது, பீரோ அவர் மீது விழுந்து தலையில் அடிப்பட்டு இறந்து விட்டதாக கூறிய பெற்றோர், அவசர கதியில் உடலை புதைத்தனர். காதலியின் மரணத்தில் வெண்மணிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது பற்றி காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நிபுணர்கள் வித்யா வீட்டில் தடயங்களை சேகரித்தனர். புதைக்கப்பட்ட உடலை நேற்று தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. வித்யாவின் பெற்றோர், அண்ணன் சரவணன் ஆகியோரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போது அதிர்ச்சியான உண்மை வெளிவந்தது.

ஏப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை