உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தெனாவட்டாக பேசிய கண்டக்டர்: மன்னிப்பு கேட்டும் கிடைத்த தண்டனை conductor forced passenger to get do

தெனாவட்டாக பேசிய கண்டக்டர்: மன்னிப்பு கேட்டும் கிடைத்த தண்டனை conductor forced passenger to get do

நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் ஸ்டாப்பில் அரசு பஸ் நிற்காததால் பஸ்சை கையால் பிடித்துக் கொண்டே பிளஸ் 2 மாணவி ஓடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 4 நாட்களுக்கு முன் மணப்பாறை அருகே ஸ்டாப்பில் அரசு பஸ் நிற்காததால் 7 ம் வகுப்பு மாணவன் பஸ்சில் இருந்து குதித்து படுகாயமடைந்தான். பஸ் ஊழியர்கள் செய்யும் தவறுகள் செல்போன் உதவியுடன் உடனுக்குடன் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வரிசையில் இன்று இன்னொரு அரசு பஸ் கண்டக்டர் தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளிவந்துள்ளது. கோவை சிங்காநல்லூரில் இருந்து பல்லடம் வழியாக போடி செல்லும் அரசு பஸ் நேற்று மாலை 6.30 மணியளவில் பல்லடம் பஸ் நிலையத்துக்கு வந்தது. அப்போது ஒரு பயணி வே.கள்ளிப்பாளையத்தில் இறங்க வேண்டும் என கண்டக்டரிடம் கேட்டார். அங்கெல்லாம் பஸ் நிற்காது என சொல்லி கண்டக்டர் அந்த பயணியை கீழே இறக்கி விட்டு விட்டார். வே.கள்ளிப்பாளையம் செல்லும் பயணிகளை கீழே இறக்கி விடுவது வழக்கமாக நடப்பது தான் என்பதால், அதே பகுதியை சேர்ந்த நபர் இதை செல்போனில் வீடியோ எடுத்து விட்டார். .இதை பார்த்து பயந்து போன கண்டக்டர், பஸ்சில் இருந்து இறங்கி ஓடி வந்தார். செல்போனில் வீடியோ எடுத்த நபரிடம் மன்னிப்பு கேட்டார். தெரியாமல் இறக்கி விட்டேன்; ஏறுங்கள்; இறக்கி விடுகிறேன் என கெஞ்சினார். ப்ரத் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கண்டக்டர் மன்னிப்பு கேட்கும் வீடியோ போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கவனத்துக்கும் போனது. இலாகாப்பூர்வமாக விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பஸ் நிற்காது என சொல்லி பயணியை இறக்கி விட்ட கண்டக்டர் முருகனை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வே.கள்ளிப்பாளையம் ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியும், சில கண்டக்டர்கள், டிரைவர்கள் பஸ்சை நிறுத்துவதில்லை. இதனால் வேலைக்கு செல்வோரும், மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். என அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். நீண்ட நாளாக இருந்த பிரச்னை கண்டக்டர் முருகன் சஸ்பெண்டுடன் முடிவுக்கு வரும் என நம்புவதாக, வே. கள்ளிப்பாளையம் மக்கள் கூறுகின்றனர்.

மார் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ