உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜயுடன் கூட்டணி அமைக்கவும் காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பம்! Congress | Rahul | Girish Chodankar

விஜயுடன் கூட்டணி அமைக்கவும் காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பம்! Congress | Rahul | Girish Chodankar

டில்லியில் சில தினங்களுக்கு முன் ஓட்டு திருட்டை கண்டித்து, காங்கிரஸ் சார்பில், ராகுல் தலைமையில் பேரணி நடந்தது. அதில், தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர். தி.மு.க. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து, தமிழக காங்கிரசின் ஐவர் குழு, முன்னாள் தலைவர்கள் மற்றும் தமிழக எம்.பி.க்களிடம், ராகுல் ஆலோசனை நடத்துவார் என கூறப்பட்டது. ஆனால், பேரணி முடிந்ததும், அன்று இரவே ராகுல், ஜெர்மனி சென்று விட்டார். இதனால், ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், டில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி.க்கள் மாணிக் தாகூர், கார்த்தி, விஷ்ணுபிரசாத், ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த் உள்ளிட்ட சிலர் மட்டும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். கலந்துரையாடல் முடிந்த பின், தமிழகத்தில் இருந்து சென்ற மாநில நிர்வாகிகள், முன்னணி தலைவர்களை தனித்தனியாக சந்தித்து, கிரிஷ் ஷோடங்கர் கருத்துகளை கேட்டறிந்தார்.

டிச 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை