மவுன்ட் ரோட்டில் MLA அராஜகம் திமுக அரசுக்கு அவப்பெயர் Congress MLA Rajakumar assaults traffic polic
ென்னை ஐகோர்ட் அருகே வழக்கறிஞர் ராஜிவ் காந்தி ஸ்கூட்டர் மீது விசிக த லைவர் திருமாவளவன் கார் சில நாட்களுக்கு முன் மோதியது. அப்போது இரு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்னையில் வழக்கறிஞரை விசிக வழக்கறிஞர்கள் விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னையில் திருமாவளவனுக்கும் போலீசுக்கும் ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இன்னொரு அரசியல்வாதி பொது இடத்தில் அடாவடியாக நடந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு: அண்ணா சாலை போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் பிரபாகரன் வயது 35. இவர், அண்ணா சாலையில் நேற்று மதியம் 1.40 மணியளவில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஐஓபி வங்கி எதிரே உள்ள ஹீரோ ஷோரூம் அருகே, போக்குவரத்திற்கு இடையூறாக ஒரு டொயோட்டா பார்ச்சூனர் கார் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டார். காரை அங்கிருந்து ஓட்டிச்செல்லும்படி டிரைவரிடம் பிரபாகரன் கூறினார். அந்த காரின் முன்புறத்தில் எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. காரில் உட்கார்ந்திருந்தது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜகுமார். காரை எடுக்கும்படி போலீஸ் சொன்னதை பார்த்ததும் ராஜகுமார் ஆவேசமானார். நான் யார் தெரியுமா? எம்எல்ஏ... என்கிட்டேயே வந்து காரை எடுக்க சொல்றியா? என போலீஸ்காரர் பிரபாகரனை பார்த்து கோபத்துடன் சீறியிருக்கிறார். போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படக்கூடாது என்பதற்காக காரை எடுக்க சொன்னேன்.. அதில் என்ன தவறு என போலீஸ்காரர் கூறியதும் எம்எல்ஏ இன்னும் ஆத்திரமடைந்தார். சாலையில் நின்று பிச்சைதானே எடுக்கிறீர்கள் என, போலீஸ்காரரை பார்த்து தரக்குறைவாக பேசியுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் எம்எல்ஏ ராஜகுமார் போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்துள்ளார். அவரது ஆதரவாளர்களும் பிரபாகரனை தாக்கியுள்ளனர். பிறகு, எம்எல்ஏவும் ஆதரவாளர்களும் அங்கிருந்து வேறு காரில் புறப்பட்டு சென்றனர். அண்ணாசாலை போலீஸ் நிலையத்துக்கு மிக அருகில் இந்த சம்பவம் நடந்ததால், போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர் விரைந்து சென்று போலீஸ்காரர் பிரபாகரனிடம் நடந்ததை கேட்டறிந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடமையை செய்த போலீஸ்காரர் பிரபாகரன் மீது, பட்டப்பகலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், அவரது ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்திய சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது. கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யப்படும் என்றார். முதலில் விசிக தலைவர் திருமாளவவன், இப்போது காங்கிரஸ் எம்எல்ஏ என அடுத்தடுத்து இரு கூட்டணி தலைவர்கள் சென்னையின் முக்கிய சாலைகளில் நடந்த அடிதடி சம்பவங்களில் சிக்கியிருப்பது திமுக தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுங்கட்சி கூட்டணி தலைவர்கள் என்றால், இப்படித்தான் அராஜகமாக நடந்து கொள்வார்களா? என்ற பொதுமக்கள் கேள்வி எழுப்ப துவங்கி இருப்பதால், திமுக அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறது. #Rajakumar #TrafficPoliceman #AnnaSalai #PoliceStation #Thirumavalavan #RoadRage #DMKAlliance #CMStalin #PoliticalDrama #TamilNaduPolitics #VCKPresident #MLAAssault #TrafficViolence #PublicSafety #LawAndOrder #PoliticalAccountability #JusticeForPolicemen #TamilNaduNews #VCK #DMK