உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செல்வபெருந்தகைக்கு இணக்கமானவர் மாற்றப்பட்டதால் நிர்வாகிகள் அதிர்ச்சி! Congress | Ajoy kumar | TN Inc

செல்வபெருந்தகைக்கு இணக்கமானவர் மாற்றப்பட்டதால் நிர்வாகிகள் அதிர்ச்சி! Congress | Ajoy kumar | TN Inc

தமிழக காங்கிரஸ் மேலிட தலைவர் அஜோய் குமார் மாற்றப்பட்டதன் பின்னணியில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிரான கோஷ்டி தலைகளின் உள்குத்துதான் காரணம் என கட்சிக்குள் புகைச்சல் எழுந்துள்ளது. தமிழக காங்கிஸ் என்றாலே கோஷ்டி அரசியல் என்பதே அடையாளம். மாநில தலைவராக பதவி வகிப்போர் தங்களுக்கான ஒரு ஆதரவு கூட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்த்து விடுவதுதான் பொது பார்முலாவாக உள்ளது. அந்த வகையில் செல்வப்பெருந்தகைக்கு முந்தைய தலைவர்களின் ஆதரவாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் இப்போதும் அசைக்க முடியாத நிலையில் கோலோச்சுகின்றனர். இது செல்வப்பெருந்தகைக்கு தற்போது வரை பெரும் சவாலாகவே உள்ளது. இதனால் மாவட்டங்களில் புதிய நிர்வாகிகள் நியமனத்தை தீவிரமாக அவர் கையில் எடுத்தார். இதன்படி மாவட்டங்களில் தலா ஒரு பொருளாளர், 4 துணைத் தலைவர்கள், 6 பொதுச் செயலாளர்கள், சர்க்கிள், வார்டு, வட்டத் தலைவர்கள் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பழைய தலைவர்களின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

பிப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி