/ தினமலர் டிவி
/ பொது
/ காங்கிரஸ் வெளியிட்ட 'கயாப்' போட்டோ நீக்கம் | Congress's 'Gayab' Post | BJP | PMModi
காங்கிரஸ் வெளியிட்ட 'கயாப்' போட்டோ நீக்கம் | Congress's 'Gayab' Post | BJP | PMModi
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தானுக்கு எதிரான போர் பதட்டம் எழுந்துள்ள சூழலில் பிரதமர் மோடியை குறி வைத்து காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல், சர்ச்சைக்குரிய படம் ஒன்றை வெளியிட்டது. அவரது பழைய போட்டோவில் உடல் இல்லாமல் அவரது ஆடைகள் மட்டும் இருந்தன. படத்தின் மேலே, காணவில்லை என்ற அர்த்தத்தில் இந்தி வார்த்தை கயாப் இடம்பெற்றிருந்தது. இந்தியில் ஜிம்மெதாரி கே சமய் -- கயாப் என கமென்ட் எழுதப்பட்டிருந்தது.
மே 01, 2025