வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எந்த பகுதியில்
சாலை பிளந்ததால் வீடுகளில் இருந்து வீதியில் திரண்ட மக்கள் | Road split | Construction work | Road pot
ென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள தரமணி சேஷாத்ரி சாலையில் அயிரா பிராப்பர்ட்டீஸ் கட்டுமான நிறுவனம் மூலம் கட்டடம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. கட்டடத்திற்கு பேஸ்மென்ட் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு கனரக இயந்திரங்கள் மூலம் அதை பலப்படுத்தும் பணி நடந்தபோது திடீரென பாதுகாப்பு வேலிகள் உள்வாங்கியது. தொடர்ந்து அருகில் உள்ள சாலையில் சுமார் 100 அடி தூரத்துக்கும் மேலாக பலத்த வெடிப்புடன் பள்ளம் ஏற்பட்டு உள் வாங்கியது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த சென்னை மாநகராட்சி ரீஜினல் டெபியூட்டி கமிஷனர் அஃதாப் ரசூல் சேதங்கள் குறித்து ஆய்வு செய்தார். திடீரென சாலை பிளந்து உள்வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எந்த பகுதியில்