பயிர்களின் பண்புகளை துல்லியமாக கண்டறியும் AI&ML
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வேளாண் பயிர்களின் நுனி முதல் அடி வரை அதன் பண்பு, தரத்தை ஆராயும் நடவடிக்கையை கோவை வேளாண் பல்கலை மேற்கொண்டுள்ளது. இதற்காக, உடுமலையை சேர்ந்த வலைரியா ஆய்வு நிறுவனத்துடன் வேளாண் பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அனைத்து துறைகளிலும் ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ஸ் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், வேளாண் துறையிலும் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளும் பணி சூடுபிடித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லர்னிங் முறையில், முதல் கட்டமாக மக்காச் சோளம் பயிரை ஆய்வு செய்யும் பணி துவங்கி உள்ளது. இதுகுறித்து, வேளாண் பல்கலை தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநர் செந்தில், வலைரியா நிறுவன தலைவர் ஸ்ரீவிஷ்ணுவர்தன், இணை நிறுவனர் பிரியதர்ஷினி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.