ஆசிரியருக்கு சம்பளம் வழங்க கட்டிங் கேட்ட கல்வி அதிகாரி nilgiris educational officer arrested dvac
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ஜான் சிபு மானிக். ஊட்டியில் உள்ள அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரை பணி நிரந்தரம் செய்ய கல்வித்துறைக்கு பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பியது. ஆனால், பணி நிரந்தரம் செய்ய பள்ளிக்கல்வித்துறை மறுத்துவிட்டது. அதை எதிர்த்து ஜான் சிபு மானிக் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜான் சிபு மானிக் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்த சென்னை ஐகோர்ட் அவரை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டது. 2018 முதல் ஊதியத்தை கணக்கிட்டு மொத்தமாக வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்டகல்வி அலுவலர் சந்தோ ைஷ ஆசிரியர் ஜான் சிபு மானிக் அணுகினார். பணி நிரந்தரத்துக்கான ஆணை மற்றும் நிலுவை ஊதியத்தை வழங்க மனு கொடுத்தார். கோர்ட் உத்தரவை செயல்படுத்தாமல் சந்தோஷ் தாமதப்படுத்தினார். உங்கள் பைலில் கையெழுத்து போட ரூபாய் 5 லட்சம் ரூபாய் எனக்கு தர வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் கேட்டுள்ளார். பிறகு, 2 லட்சம் லஞ்சம் கொடுத்தால் கையெழுத்து போடுவதாக கூறினார்.