திமுக பெண் கவுன்சிலர் முற்றுகை: குழாயடி சண்டையான நகராட்சி கூட்டம் | Councillors Clash | Tindivanam
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி கூட்டம் சேர்மன் நிர்மலா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திண்டிவனம் புது பஸ் ஸ்டாண்ட் பணிகள், பட்ஜெட் முறைகேடுகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். 21வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் தீபா, அவரது பகுதியில் அங்கன்வாடி பணி முடங்கியது குறித்து பேசினார். இதற்கு 20வது வார்டு திமுக கவுன்சிலர் ரம்யா எதிர்ப்பு தெரிவித்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. ரம்யா கவுன்சிலர் போல பேசவில்லை; கான்ட்ராக்டர் போல பேசுகிறார் என மற்ற பெண் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். ஒரு கட்டத்தில் பெண் கவுன்சிலர்களுக்கு இடையிலான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறும் சூழல் உருவானது. #TindivanamCouncil #CouncillorsClash #TindivanamProtest #WomenCouncillors #DMKvsIndependent #MunicipalMeeting #AnganwadiIssue #TindivanamNews #CouncilAdjourned #Ward20Ward21 #TamilNaduLocal #BusStandWorks #BudgetIrregularities #LocalBodyDrama #CouncilDispute