மலையை சிவனாக கருதும் இந்துக்கள் மனம் புண்படுமே: நீதிபதி Tirupparankundram Case| Madra High Court| Co
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, மதுரை ஐகோர்ட் கிளையில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த 3வது நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். திருப்பரங்குன்றம் மலை மீது கோழி, ஆடு உள்ளிட்ட விலங்குகளை பலியிட, சமையல் செய்ய, அசைவு உணவு மலை மீது கொண்டு செல்ல தடை விதித்தார். அத்துடன், அந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அதற்கான ஆதரங்களையும் சுட்டிக்காட்டினார். திருப்பரங்குன்றம் மலையில் தெற்கு பகுதியில் உள்ள பாறை குகைகள் மற்றும் கல்வெட்டுக்கள் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டது. மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு பின் உள்ள மேற்கு சரிவு மலையில் பஞ்ச பாண்டர் படுகைகள், குகை போன்றவை பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்களாக 1923ல் அறிவிக்கப்பட்டது. இந்த 2 அறிவிப்புகளும் சிக்கந்தர் தர்கா இருப்பதையும், மலையின் பெயர் திருப்பரங்குன்றம் மலை என்பதையும் தெளிவாக குறிப்பிடுகின்றன. திருப்பரங்குன்றம் மலையை பற்றி, சிக்கந்தர் மலை என்று எந்த குறிப்பும் இல்லை. பிரிவி கவுன்சில்(Privy Council) உத்தரவில், இந்த மலைக்குன்று சுவாமி மலை அல்லது கடவுளின் மலை என்று அரசு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி, 170 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில், 33 சென்ட் நெல்லித்தோப்பு பகுதி, தர்கா உள்ள இடத்தை தவிர மீதமுள்ள முழு மலையும் கோயில் தேவஸ்தானதுக்கு சொந்தமானது என்பது தெளிவாகிறது. இந்த மலைக்குன்று இந்துக்களால் ஒரு லிங்கமாக வணங்கப்படுகிறது. கோயில் விக்ரகம் மலையின் ஒரு பகுதியாகவே கருதப்படுவதால், பக்தர்கள் மலையை சுற்ற கிரிவீதியில் சுற்றி வருகின்றனர் என பிரிவி கவுன்சிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. முழு மலைக்குன்றுமே சிவனாக கருதப்பட்டு இந்து பக்தர்களால் கிரிவலம் நடத்தப்படுகிறது. இந்த மலையை சிக்கந்தர் மலை என பெயரிட்டால், கிரிவலம் செய்யும் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்று நீதிபதி அந்த உத்தரவில் கூறியுள்ளார். #TirupparankundramCase #TirupparankundramUpdates #JusticeForTirupparankundram #TirupparankundramStory