உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை வழக்கறிஞர் சம்பவம்: 4 பேர் கைது! SP பேட்டி Covai Advocate Murder | Coimbatore SP V Badri Nara

கோவை வழக்கறிஞர் சம்பவம்: 4 பேர் கைது! SP பேட்டி Covai Advocate Murder | Coimbatore SP V Badri Nara

கோவை விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். வயது 48, வழக்கறிஞர். நேற்று ஒரு வழக்கு தொடர்பாக பொள்ளாச்சிக்கு காரில் உதயகுமார் புறப்பட்டார். பொள்ளாச்சி சாலையில் வழிமறித்த மர்ம கும்பல் உதயகுமாரை கீழே இறக்கி, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பலத்த காயமடைந்த உதயகுமர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை கொலை செய்த நபர்கள், உதயகுமாரின் காரிலேயே தப்பிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிபாளையம் போலீசார் உதயகுமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்வதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கோவையை சேர்ந்த அய்யனார் என்கிற செல்வம், கவுதம் என்கிற விருமாண்டி, அருண்குமார், அபிஷேக்,ஆகிய நால்வர் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் நள்ளிரவில் சரண் அடைந்தனர்.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி