18 பஞ்சாபி தாபாக்களுக்கு சீல் வைத்த போலீஸ்! Covai Police |Liquor sale|punjabi dhaba Sealed
கோவை புறநகர் பகுதிகளில் மது மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பாக உணவு விடுதிகள், பஞ்சாபி தாபாக்களில் 24 மணி நேரம் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. போலீசார் தனிப்படை அமைத்து அதிரடி சோதனை நடத்தினர். அன்னூர், கோவில்பாளையம், சூலூர், கருமத்தம்பட்டி, செட்டிபாளையம், மதுக்கரை, க.க.சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உணவு விடுதிகள், தாபாக்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அங்கு 18 தாபாக்களில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். மது விற்பனை செய்த 18 தாபாக்களுக்கு அந்தந்த பகுதிகளை சேர்ந்த வட்டாட்சியர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சீல் வைத்தனர்.