கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன? வெளியான அப்டேட் | Covid 19 | Tamilnadu Covid
4000 பாதிப்பை தொடும் இந்தியா கொரோனாவில் தமிழகம் ரிவர்ஸ் உலகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவ துவங்கி உள்ளது. இந்தியாவிலும் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தனர். இந்த நிலையில், நாடு முழுதும் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 203 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 2ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 3,961 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள மாநிலமான கேரளாவில் இதுவரையில் 1,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவுக்கு அடுத்தபடியாக அடுத்தபடியாக மஹராஷ்டிராவில் 506 பேரும், டில்லியில் 484 பேரும், மேற்கு வங்கத்தில் 339 பேரும், குஜராத்தில் 338 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஞாயிறன்று ஒரு நாளில் மட்டும் டில்லியில் 47 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் டில்லியில் மட்டும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 483ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் இறந்துள்ளார். இதனால், டில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 199ல் இருந்து 189ஆக குறைந்துள்ளது. பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் உள்பட பொது இடங்களில் கூடும் மக்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.