உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பு: மக்கள் பீதி | Covid Cases increased India

இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பு: மக்கள் பீதி | Covid Cases increased India

2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடியதை யாரும் மறந்திருக்க முடியாது. உலகம் முழுக்க பல லட்சம் பேர் பலியானார்கள். சில வாரங்களாகவே உலகம் முழுதும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ துவங்கி உள்ளது. இந்தியாவிலும் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தனர். கடந்த 26ம்தேதி நிலவரப்படி இந்தியாவில் 1010 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அடுத்த 4 நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமெடுத்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 227 பேர் பாதிக்கப்பட்டனர்.நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 2710 ஆக உயர்ந்தது. 2020, 2021, 2022 ஆண்டுகளைப்போலவே இப்போதும் கேரளாவில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1147 கோவிட் கேஸ்களுடன் கேரளா முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 148 கேஸ்களுடன் 5வது இடத்தில் உள்ளது. மகாராஷ்ட்ரா, டில்லி, குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மே 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி