சிபிஆர் சொந்த ஊரில் கரண்ட் கட்: மக்கள் அதிர்ச்சி CP Radhakrishnan Vice President elections
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெற்றார். வெற்றி பற்றிய அறிவிப்பு இரவு 7.25 மணியளவில் வெளியானது. சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதும் நாடு முழுக்க பாஜவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பாஜ தலைமையகத்திலும் கொண்டாட்டம் களைகட்டியது. ஆனால், சி.பி.ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரான திருப்பூரில் அவர் வீடு உள்ள ெஷரீப் காலனியில் மின்தடை ஏற்பட்டு, இருளில் மூழ்கிக் கிடந்தது. இரவு 7.15 மணிக்கு திடீரென கட்டான கரண்ட், 7.35 மணிக்குத்தான் வந்தது. சிபிஆர் வெற்றி அறிவிக்கப்பட்டதும் அவர் வீட்டு முன் திரண்ட பாஜவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். வெற்றி அறிவிக்கப்பட்ட நேரத்தில் சிபிஆர் வீடு இருளில் மூழ்கிக் கிடந்ததை பார்த்து திருப்பூர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். #CPRadhakrishnan #VicePresidentElections #BJPWorkers #Celebration #Tiruppur #CPRHouse #PowerCut #DarkTimes #ElectionResults #DemocracyInAction #BJPVictory #TamilNadu #PoliticalCelebration #JoinTheMovement #StrengthInUnity #ElectoralVictory #RiseWithBJP #PartySpirit #LightInDarkness #HopeForTheFuture