உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மூதாதையர் சமாதிகள் தரைமட்டமானதால் பதறிய கிராம மக்கள் | Cremation ground | Encroachment | Pennagaram

மூதாதையர் சமாதிகள் தரைமட்டமானதால் பதறிய கிராம மக்கள் | Cremation ground | Encroachment | Pennagaram

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் முதுகம்பட்டி சாலையில் இருந்த 500 ஆண்டு பழமையான சுடுகாட்டை குறிப்பிட்ட சமூக மக்கள் பயன்படுத்தி வந்தனர். இன்று காலை சுடுகாடு இருந்த இடத்தை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தங்கள் மூதாதையர்களின் சமாதிகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்ததால் பதறி துடித்தனர். சுடுகாட்டின் அருகில் உள்ள விளைநிலத்தை சமீபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் வாங்கி இருந்தனர். அதில் வீட்டுமனை போடுவதற்காக நிலத்தை பொக்லைன் மூலம் சமன் செய்து வந்தனர். நேற்று இரவோடு இரவாக அருகில் இருந்த சுடுகாட்டில் இருந்த சமாதிகளையும் இடித்து சமன்படுத்தி உள்ளனர். தகவல் பரவியதும் அந்த சமூகத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டனர். மூதாதையர்களை புதைத்த இடத்தில் புதிய சவக்குழி கற்களை நட்டனர். சுடுகாட்டு பகுதிக்கு கம்பி வேலி அமைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். அரசு தலையிட்டு விரைந்து தங்கள் சுடுகாட்டை மீட்டு தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நவ 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ