உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 14 ஆயிரம் கடனுக்காக நடந்ததா கொடூர செயல்! | Crime | Ambur Crime News | Police Investigation

14 ஆயிரம் கடனுக்காக நடந்ததா கொடூர செயல்! | Crime | Ambur Crime News | Police Investigation

நண்பனின் 2 குழந்தைகளை தீர்த்து கட்டிய துயரம்! ஆம்பூரை உறைய வைத்த சம்பவம் டிஸ் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூரை சேர்ந்தவர் யுவராஜ். இவருக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். யுவராஜின் நண்பர் வசந்த், இவர் குடியாத்தம் அருகே உள்ள ஏரிப்பட்டியைச் சேர்ந்தவர். கட்டட ஒப்பந்ததாரர். வசந்த், யுவராஜின் குழந்தைகளை வெளியே அழைத்துச்சென்று திண்பண்டங்கள் வாங்கி தருவது வழக்கம். அதே போல் நேற்று மாலை வசந்த் 2 குழந்தைகளையும் கடைக்கு அழைத்து சென்றுள்ளார். இரவு நேரம் ஆகியும் வசந்த் மற்றும் 2 குழந்தைகளும் வீடு திரும்பவில்லை. வசந்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. ஊர் முழுக்க 3 பேரையும் யுவராஜ் குடும்பத்தினர் தேடினர். ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோயிலின் பின்புறம் இரண்டு குழந்தைகளும் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதிர்ச்சியடைந்த யுவராஜ் ஆம்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார் குழந்தைகளின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் ஆய்வில் குழந்தைகளின் உடலில் எந்த ரத்த காயமும் இல்லை. கழுத்தை நெரித்து கொன்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அப்பகுதியில் கொலையாளி விட்டு சென்ற தடயங்களை போலீசார் சோதனையிட்டனர். அருகே இருந்த விவசாய நிலத்தில் கேட்பாரற்று ஒரு பைக் நின்றது.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !