/ தினமலர் டிவி
/ பொது
/ கடந்த ஆண்டும் இதே பாணி; இந்த முறை ஆட்டம் குளோஸ்! | Crime | Crime News | Pudukkottai rowdy | rowdy Du
கடந்த ஆண்டும் இதே பாணி; இந்த முறை ஆட்டம் குளோஸ்! | Crime | Crime News | Pudukkottai rowdy | rowdy Du
திருச்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பிரபல ரவுடி துரை சாமி, இவர் மீது 4 கொலை, கொலை முயற்சி, திருட்டு என 74 வழக்குகள் உள்ளன. இதில் ஒரு கொலை வழக்கில் விடுதலையாகி உள்ளார். கடந்த ஆண்டு ஜாமினில் வெளி வந்த துரை தலைமறைவானார். மீண்டும் அவரது ஆட்டம் தொடர்ந்தது. தேடப்பட்டு வந்த துரை புதுக்கோட்டை, திருவரங்குளம் அருகே தைலமர காட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆலங்குடி இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீஸ் டீம் காட்டுப்பகுதியில் சல்லடை போட்டு மாலையில் துரையை நெருங்கினர். போலீசார் ரவுண்டப் செய்ததை அறிந்ததும் ரவுடி துரை தப்பி செல்ல முயன்றார்
ஜூலை 11, 2024