உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3 குழந்தைகளை பரிதவிக்க விட்டு கம்பி எண்ண சென்ற தாய்! |Crime | Musiri Police|Investigation| Trichy

3 குழந்தைகளை பரிதவிக்க விட்டு கம்பி எண்ண சென்ற தாய்! |Crime | Musiri Police|Investigation| Trichy

திருச்சி முசிறி அருகே சிறுசோழன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார், வயது 43. விவசாய வேலையுடன் கோயிலுக்கு நேர்த்தி கடனுக்காக அழகு குத்தி விடும் வேலையும் செய்து வந்தார். இவரது மனைவி விஜயா வயது 36. தம்பதிக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். தொழில் ரீதியாக குமாருக்கு பழக்கம் ஏற்பட்டவர் மண்ணச்சநல்லூரை சேர்ந்த பாலு. 10 வருட நட்பால் பாலு அவ்வப்போது குமாரின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதில் விஜயாவுடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த சூழலில் சிறுக சிறுக குமாருக்கு 15 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடன் சுமை காரணமாக குமார் மனைவி விஜயாவிடம் சண்டை போட்டுள்ளார். அவரது நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்து திட்டி வந்ததாக தெரிகிறது. கடனை நீ அடைத்துக் கொள் என குமார், மனைவியை திட்டி உள்ளார். குமாரை கொலை செய்து விட்டு பாலுவுடன் நிம்மதியாக இருக்க விஜயா திட்டம் தீட்டி உள்ளார். அப்பகுதியில் உள்ள மெடிக்கலில் விஜயா தினசரி 2 தூக்க மாத்திரைகள் வாங்கி சேமித்துள்ளார். குமாருக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்படும்போது முருங்கை சூப் குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

செப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ