இரவில் திருமுல்லைவாயலில் பரபரப்பு சம்பவம்! | Crime | Police Investigation
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் 8வது வார்டு அதிமுக வட்ட செயலாளர் ராஜசேகர். வயது 43. இவர் இன்று இரவு திருமுல்லைவாயல் சிவன் கோயில் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அவரது நண்பர் வினோத்துடன் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ராஜசேகரை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற ராஜசேகரை கழுத்து, தலை, முகம் என சரமாரியாக வெட்டினர். தடுக்க வந்த ராஜசேகரின் நண்பர் வினோத்தையும் தாக்கி விட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. ரத்த வெள்ளத்தில் ராஜசேகர் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். சம்பவ இடத்துக்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார் ராஜசேகரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிப் 06, 2025