நாம் தமிழர் நிர்வாகியை ஓட ஓட வெட்டிய கும்பல்-என்ன நடந்தது | NTK Balasubramaniam | Madurai case
NTK நிர்வாகியை ஓட ஓட வெட்டி சாய்த்த கும்பல் அமைச்சர் வீட்டருகே பயங்கரம் நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி துணை செயலாளராக இருந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தல்லாக்குளம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள சொக்கிக்குளம் வல்லபாய் தெரு பகுதியில் வாக்கிங் செல்வது வழக்கம். இன்று காலை வழக்கம் போல் வாக்கின் சென்றார். அந்த பகுதியில் அவரை போல் நிறைய பேர் வாக்கிங் சென்று கொண்டு இருந்தனர். திடீரென ஒரு கும்பல் பாலசுப்பிரமணியனை அரிவாளுடன் துரத்த ஆரம்பித்தது. உயிர் தப்பிக்க பாலசுப்பிரமணியன் ஓடினார். அந்த கும்பலும் விடாமல் துரத்தி சென்றது. காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று பாலசுப்பிரமணியன் கூச்சலிட்டார். ஆனால் அந்த கும்பல் அவரை சுற்றி வளைத்தது. சரமாரியாக வெட்டியது. கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றது. ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலசுப்பிரமணியன் உயிருக்கு போராடினார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக சொன்னார். பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. கொலை நடந்த இடம் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதி. பாதுகாப்பு நிறைந்த இடம். பக்கத்தில் தான் அமைச்சர் தியாகராஜன் வீடு உள்ளது. அங்கு எப்போதும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இன்னொரு புறம் தல்லாக்குளம் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. இவ்வளவு பாதுகாப்பான நிறைந்த இடத்தில் நடந்த கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் சமீபத்தில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை மொத்த தமிழகத்தையும் உலுக்கியது.