தம்பதிகள் தனியாக வசிக்கும் வீடுகளில் நடக்கும் சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி! |Crime|Sivagiri|Erode
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வெள்ளாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. வயது 75. இவரது மனைவி பாக்கியம்மாள். இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவரது மகன் கவிசங்கர் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கவிசங்கர் கடந்த இருநாட்களாக பெற்றோரை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். யாரும் போனை எடுக்கவில்லை. கவிசங்கர் அருகில் இருந்தவர்களை சென்று பார்க்க கூறி உள்ளார். அப்போது ராமசாமி வீட்டுக்கு உள்ளேயும், பாக்கியம்மாள் வீட்டுக்கு வெளியேயும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். பாக்கியம் அணிந்திருந்த தாலிக்கொடி, தங்கவளையல் உள்ளிட்ட 15 பவுன் நகைகள் காணாமல் போயுள்ளன. சம்பவ இடத்தில் ஈரோடு எஸ்பி சுஜாதா, பெருந்துறை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.