உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரீமியர் லீக் தொடரை நிறைவு செய்தது சிஎஸ்கே | Premier league cricket | CSK | Consolation win | Ends

பிரீமியர் லீக் தொடரை நிறைவு செய்தது சிஎஸ்கே | Premier league cricket | CSK | Consolation win | Ends

புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆயுஷ் மாத்ரே, கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடியாக ஆடிய மாத்ரே 17 பந்துகளில் 34 ரன் குவித்தார். தொடர்ந்து வந்த உர்வில் படேல் 37 ரன்னும், துபே 17 ரன்னுடனும் அவுட்டாகினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கான்வே 35 பந்துகளில் 52 ரன் குவித்து அவுட்டானார். இறுதியில் அதிரடியாக விளையாடிய பிரேவிஸ், குஜராத் அணியின் பந்துவீச்சை சிக்சரும், பவுண்டரியுமாக பறக்க விட்டு 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனால், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன் சேர்த்தது. தொடர்ந்து, விளையாடிய குஜராத் அணி, சென்னையின் பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. கில் 13 ரன்னுடனும், பட்லர் 5, ஷாருக்கான் 19 ரன்னுடனும் அவுட்டாகினர். மறுமுனையில் பொறுப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 41 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பிறகு வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்ததால் குஜராத் அணி 18.3 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. இதன்மூலம், 83 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. நடப்பு பிரீமியர் லீக் தொடரில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்துடன் தொடரை நிறைவு செய்தது.

மே 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை