மக்களை மிரட்டிய ரவுடிகள்: போலீஸ் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு cuddalore police crime 3 rowdy attacks
போதை இளைஞர்கள் வெறியாட்டம் ஆடுவது பற்றி போலீசுக்கு தகவல் பறந்தது. கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் துரித கதியில் விசாரணையை துவங்கினர். சம்பவம் நடந்த ஓரிரு மணி நேரங்களில் அந்த வாலிபர்களின் அட்ராசிட்டி செய்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோவை வைத்து, கஞ்சா போதையில் அட்டூழியம் செய்தது விருத்தாசலத்தைச் சேர்ந்த ரவுடிகள் கந்தவேல், சிவா என்பதும், வீடியோ எடுத்தது அவர்களது நண்பன் பாலாஜி என்பதும் தெரிய வந்தது. அவர்கள் செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்தபோது, விருத்தாசலம் அருகே பெரிய கண்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள முந்திரிதோப்பில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. பகல் 12 மணியளவில் முந்திரி தோப்புக்கு இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, போலீஸ்காரர்கள் வீரமணி, வேல்முருகன் உள்ளிட்ட போலீசார் விரைந்தனர். போலீசை பார்த்ததும் பாலாஜி தப்பி ஓடிவிட்டான். ரவுடிகள் கந்தவேல், சிவாவை சுற்றிவளைத்தனர். மாட்டிக் கொண்ட கந்தவேல் கையில் வைத்திருந்த கத்தியால் போலீசாரை தாக்கினான். இதில், போலீசார் வீரமணி, வேல்முருகனுக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, துப்பாக்கியை காட்டி கந்தவேலை எச்சரித்தார். ஆனாலும், கத்தியை கீழே போட மறுத்து சந்துருவையும் கந்தவேல் தாக்க வந்தான். சற்றும் தாமதிக்காமல் சந்துரு துப்பாக்கியால் அவன் காலில் சுட்டார். கந்தவேல் சுருண்டு விழுந்ததும் அவனை போலீசார் மடக்கி பிடித்தனர். கந்தவேலை போலீசார் பிடிக்க சென்றபோது, அந்த கேப்பில் சிவா தப்பி ஓடினான். அப்போது, பள்ளத்தில் விழுந்து