காப்பாற்ற முயன்றவருக்கும் வெட்டு; ரேக்ளா ரேஸ் ஆல் முன் விரோதமா? | cumbum crime | Theni
ரோட்டில் பால் வியாபாரியை வெட்டி சாய்த்த மர்ம கும்பல்! உறவினர்கள் சாலை மறியல் தேனி மாவட்டம் கம்பம், ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்தவர் இளம்பருதி. வயது 27. பால் வியாபாரியான இவர், ரேக்ளா ரேஸ் மாடுகளையும் வளர்த்து வளர்த்து வருகிறார். இன்றிரவு மணிகட்டி ஆலமரம் சாலையில் உள்ள டீ கடையில் இருந்து வெளியே வந்த அவரை, மர்ம நபர்கள் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதை பார்த்த ஈஸ்வரன் என்பவர் இளம்பருதியை காப்பாற்ற முயன்றபோது, அவருக்கும் வெட்டு விழுந்தது. சரிந்து விழுந்த இருவரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், இளம்பருதி இறந்துவிட்டார். ஈஸ்வரனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரேக்ளா ரேஸ் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். இளம்பருதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல விடாமல் போலீசாரை தடுத்து உறவினர்கள் ஊர்மக்கள், மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தினர். போலீசார் அவர்களுடன் பேசி சமாதானம் செய்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதி அளித்து அவர்களை கலைந்துபோக செய்தனர். அதன் பின் பிரேத பரிசோதனைக்கு இளம்பருதி உடலை எடுத்து சென்றனர். கம்பம் வடக்கு போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.