பேஜர், வாக்கி டாக்கி இல்ல.. அதுக்கும் மேல: இஸ்ரேல் சம்பவம் | Cyber Assault on Iran | Massive Cyber A
லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புலா பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. பேஜர் அட்டாக், வாக்கி டாக்கி அட்டாக் வான்வழி தாக்குதல் என சண்டையை துவங்கிய இஸ்ரேல், இப்போது தெற்கு லெபனான், தென்மேற்கு லெபனானில் தரைவழி தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளது. ஹெஸ்புலாக்களின் பதுங்கு குழி, ஆயுத கிடங்குகள், இதர கட்டமைப்புகள் என 2000 இலக்குகளை அழித்தது. எல்லையை ஒட்டிய ஊர்களில் தீவிர தேடுதல் வேட்டையில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது. தரைவழி தாக்குதலை துவங்கிய பிறகு ஹெஸ்புலாக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து வருவதாக இஸ்ரேல் கூறி உள்ளது. ஏராளமான பதுங்கு குழிகள், சுரங்கங்களை தகர்த்து விட்டோம். ஹெஸ்புலா பயங்கரவாதிகள் விட்டு சென்ற துப்பாக்கி, குண்டுகளை ஏராளமாக கைப்பற்றி உள்ளோம் என்றும் கூறியது. குறிப்பாக மசூதிகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. மசூதியை தங்களின் பிரதான ஆப்ரேஷன் சென்டராக ஹெஸ்புலாக்கள் பயன்படுத்தி வந்தனர். இஸ்ரேலுக்கு எதிரான எல்லா சதி திட்டங்களையும் மசூதியில் கூடி தான் ஹெஸ்புலாக்கள் ஆலோசித்துள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது. இதனை தொடர்ந்து ஹெஸ்புலா மீதான தாக்குதலை கண்டித்து இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஹெஸ்புலாவுக்கு ஆதரவாக ஈரானும் உள்ளே வர மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கலாம் என்பதால் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானில் விமானங்களில் பேஜர்கள், வாக்கி டாக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. லெபனானில் தாக்குதல் நடத்தியது போல் தங்கள் நாட்டிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக இந்த தடையை ஈரான் விதித்துள்ளது.