உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 83,000 வாட்ஸ் ஆப் எண்களும் முடக்கம் Cyber Crime| NCB|

சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 83,000 வாட்ஸ் ஆப் எண்களும் முடக்கம் Cyber Crime| NCB|

சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக திமுக எம்.பி திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் சஞ்சய் பண்டி குமார் ராஜ்யசபாவில் பதில் அளித்தார். நாட்டு மக்களிடம் சைபர் குற்றங்கள் மூலம் பண மோசடி நடப்பதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளில் 7 முறை சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மெசேஜ் அனுப்புகிறோம். சந்தேக அழைப்புகள் வந்தால், 1930 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இது குறித்து டெலிகாம் சர்வீஸ் நிறுவனங்களுக்கு அரசு தகுந்த அறிவுரை வழங்கியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும், இது குறித்த அறிவிப்பு ஒலிபரப்பப்படுகிறது.

மார் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ