புதுச்சேரி பெஞ்சல் புயல் பாதிப்பின் மற்றொரு சோகம் | Cyclone Fengal | lake overfull | Flood in villag
புதுச்சேரியின் கிராமப்புற பகுதியான சந்தை புதுக்குப்பத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ஒட்டு மொத்த புதுச்சேரி மாநிலத்தையும் புரட்டி போட்ட பெஞ்சல் புயல் மழைக்கு இந்த கிராமம் தப்பவில்லை. நேற்று காலை முதல் பெய்த கனமழையால் அருகில் உள்ள தமிழக பகுதியான கொல்லாங்குப்பம் ஏரி வேகமாக நிரம்பியது. ஏரியின் ஒரு பகுதி உடைந்து வெள்ளம் சந்தை புதுக்குப்பம் ஏரிக்கு பெருக்கெடுத்தது. இதனால் இந்த எரியும் நிரம்பி நள்ளிரவு மழை நீர் ஊருக்குள் புகுந்தது. இதுவரை மழையை மட்டும் எதிர்கொண்டு வந்த கிராம மக்கள் எதிர்பாராத நேரத்தில் ஏரி நீர் வீட்டுக்குள் நுழைந்ததால் பதட்டம் அடைந்தனர். வீட்டில் இருந்த பொருட்கள், துணிமணிகள் அனைத்தும் நீரில் மூழ்கின. அனைத்தையும் இழந்து நிற்கதியாய் நிற்பதாகவும், இதுவரை ஒருவர் கூட வந்து எட்டி பார்க்கவில்லை என கிராம மக்கள் வேதனையுடன் கூறினர்.