புதுச்சேரி அருகே கரையை கடக்கும் பெஞ்சல் புயல் | Cyclone Fengal landfall | Mamallapuram - Karaikal |
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற நிலையில் அதற்கு பெஞ்சல் என பெயர் சூட்டப்பட்டது. இது, மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சனியன்று மதியம் கரையை கடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், புயல் நகரும் வேகம் குறைந்ததால் மாலை தான் கரையை கடக்கும் என மீண்டும் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாலை 5.30 மணிக்கு பெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டுவிட்டதாக வானிலை மையம் தெரிவித்தது. மணிக்கு 7 கி.மீ வேகத்தில் புதுச்சேரி அருகே கரையை கடந்து வரும் புயல், 9.30 மணிக்கும் முழுமையாக கரையை கடக்கலாம் எனவும் வானிலை மையம் கணித்து உள்ளது. புயல் கரையை கடந்து வருவதால் கிழக்கு கடற்கரை சாலையில் பலத்த காற்று வீசி வருகிறது. கடலோர மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்தாலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.