உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொங்கு தாங்குமா...? அங்கேயும் போகுது பெஞ்சல் | cyclone fengal | fenjal update | kovai weatherman

கொங்கு தாங்குமா...? அங்கேயும் போகுது பெஞ்சல் | cyclone fengal | fenjal update | kovai weatherman

தெற்கு வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் தமிழகம், புதுச்சேரியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. காரைக்கால், மாமல்லபுரம் இடையே நாளை மதியம் இந்த புயல் கரையை கடக்க உள்ளது. அப்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். கனமழை கொட்டித்தீர்க்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் கரையை கடந்த பிறகு கொங்கு மண்டலம் வழியாக புயல் சின்னம் பயணிக்க இருப்பதாகவும், இதனால் கோவை, நீலகிரி உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்க்கும் என்றும் கோவை வேதர்மேன் என்று அழைக்கப்படும் சந்தோஷ் கிருஷ்ணன் கூறி உள்ளார். இப்படியொரு நிகழ்வு நடப்பது மிகவும் அரிதானது, 47 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடக்கப்போகிறது என்றும் அவர் கூறினார்.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ