உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முரசு புயலால் ரயில் சேவை பாதிப்பு: வெளிமாநில எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கத்தில் தாமதம் Cyclone Murasu

முரசு புயலால் ரயில் சேவை பாதிப்பு: வெளிமாநில எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கத்தில் தாமதம் Cyclone Murasu

மணிக்கு 110 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் வங்கக்கடலில் உருவான முரசு புயல், அதிதீவிர புயலாக மாறி, ஆந்திராவின் நெல்லூர் - நரசப்பூர் இடையே இன்று கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது, ஆந்திராவின் பல மாவட்டங்களில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. ஒரு சில இடங்களில், அவ்வப்போது, 120 கிமீ வேகம் வரை காற்றின் வேகம் இருந்ததாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திராவுக்கு செல்லும் ரயிஙல்கள், ஆந்திராவை கடந்து செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

நவ 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ