போக்கு காட்டியதால் கணிக்க தவறியதாக தகவல்! | Cyclone | Bay of Bengal | IMD
வங்கக்கடலில் இந்த முறை உருவான பெஞ்சல் புயல் ஆரம்பம் முதலே வானிலை அதிகாரிகளை திணறடித்துள்ளது. பெரும்பாலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் பூமத்திய ரேகைக்கு வடக்கில் தான் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அதை சுற்றி ஏற்படும் காற்றின் போக்குக்கு ஏற்ப, ஏதேனும் ஒரு திசையை நோக்கி நகரும். ஆனால் இந்த முறை உருவான காற்றழுத்த தாழ்வு பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியிலேயே பயணித்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான பின்னும் அதே பகுதியில் பயணித்ததால் நகர்வுகள் குறித்த கணிப்புகளில் சிக்கல் ஏற்பட்டது.
டிச 04, 2024