உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலர் பசுமை சைக்கிளத்தானில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு! Dinamalar | Cyclothon | Coimbatore

தினமலர் பசுமை சைக்கிளத்தானில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு! Dinamalar | Cyclothon | Coimbatore

சூழல் பாதுகாப்புக்காக பசுமை சைக்கிளத்தான் நடத்திய தினமலர்! உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தினமலர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், மாநகர போலீஸ், நேரு கல்வி குழுமம் இணைந்து பசுமை சைக்கிளத்தான் நிகழ்ச்சியை கோவையில் நடத்தியது. வனம், வன உயிரினம், சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் நிலைகள் மீட்பு ஆகியவற்றில், தினமலர் நாளிதழின் பங்களிப்பு எப்போதும் இருக்கும். அந்த பயணத்தில், இது மேலும் வலுசேர்க்கும் என்று நம்புகிறோம் என்ற வாசகங்களோடு களம் இறங்கியது தினமலர். இந்த நிகழ்ச்சி கோவை பாரதியார் ரோடு மகளிர் பாலிடெக்னிக் முன் துவங்கி, பாலசுந்தரம் ரோடு வழியாக ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க்கில் நிறைவடைந்தது. இதில் 15 வயது நிறைவடைந்த இரு பாலரும் பங்கேற்றனர். நிகழ்வை போலீஸ் கமிஷனர் சரவண சந்தர் சைக்கிள் ஓட்டி துவக்கி வைத்தார். அவருடன் நேரு கல்வி குழும தலைவர் கிருஷ்ண குமார், இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், சைக்கிள் கிளப்பை சேர்ந்தவர்கள், சூழல் ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் டீ ஷர்ட் வழங்கப்பட்டது.

ஜூன் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி